36வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் ஹீரோவாக, இசையமைப்பாளராக, பின்னணி பாடகராக, தயாரிப்பாளராக என பன்முக திறமை கொண்டவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
இவர் நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு, நட்பே துணை, அன்பறிவு, PT சார் ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்தன. அடுத்ததாக தனது பிளாக்பஸ்டர் படமான மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இன்று ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாள். தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் ஆதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என்கின்றனர். மேலும் இவர் ஒரு படத்திற்காக ரூ. 3 கோடி முதல் ரூ. 7 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
