அப்போ ஆண்டவர்? இப்போ நயன் தாரா? எல்லாம் தனுஷ் விவாகரத்து செஞ்ச நேரம் அப்படி

Dhanush Kamal Haasan Nayanthara Priya Bhavani Shankar Thiruchitrambalam
By Edward Jun 15, 2022 02:06 AM GMT
Report

பல ஆண்டுகள் கழித்து நடிகர் தனுஷ் யாரடி நீ மோகினி படத்தினை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனப்ம் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களை இணையத்தளத்தில் அறிமுகம் செய்து வைத்து வருகிறார்கள் படக்குழு. ஆனால் படத்தினை ஒருவரும் கவனிக்காமல் இருப்பது தான் பெரிய அதிர்ச்சியாகியுள்ளது.

இதற்கு முழு காரணமே தனுஷின் நேரம் தான். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் வந்து பிரபலமாகி அதைப்பற்றியே பேச ஆரம்பித்து விட்டார்கள். அப்போதும் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேகள் வெளியாகி தான் இருந்தது. ஆனால் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

அதேபோல் கடந்த வாரம் நயன் தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்ற போது தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் புகைப்படங்களும் வெளியீட்டு தேதியும் வெளியானது. அதையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

இடையில் படத்தின் சில லீக் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகியது. இதனால் விவாகரத்துக்கு பின் தனுஷை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து வருவது அவருக்கு சங்கடத்தை கொடுத்து வருகிறது.