ஜெயலலிதாவுக்கு முன்பே இந்த விஷயத்தில் போட்டிப்போட்ட சிவாஜி! யானை விசயமா இருக்கே?
தமிழக அரசியலிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி ஆரம்பகால சினிமாத்துறையில் மிகமுக்கியமாக கருத்தப்பட்டது யானை பரிசளிப்பு. தமிழக அரசியல் ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆன்மீகம், ஜோதிடம், பரிகாரம் போன்றவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையில் இருந்தவர்.
அதிலும் கோவில்களுக்காக பல யானைகளை பரிசளித்து இருக்கிறார். அவருக்கு போட்டியாக 1969ல் இருந்தே யானையை பரிசாக அளிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
அமெரிக்காவின் கலாச்சார தூதுவராக சிவாஜி அவர்கள் இருந்த போது நயாகரா நகரில் ஒரு நாள் மேயராக பணியாற்றி கெளரவிக்கப்பட்டாராம். அப்போது நியூ மெக்சிகோவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் குருவிகள் வாங்க சிறுவர்கள் பணம் கொடுப்பதை பார்த்து நானும் ஒரு யானையை பரிசளிப்பதாக வாக்கு கொடுத்தாராம்.
இதையடுத்து சென்னை வந்த சிவாஜி கமலா என்ற யானை குட்டி ஒன்றினை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளார். அங்குள்ள சூழல் பொருந்தமாக இல்லை என்று அதற்காக கம்பளிகள் போர்த்தி கமலாவிற்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளார் சிவாஜி.
இதேபோல் தஞ்சை கோவில்லும் வெள்ளையம்மா என்ற பெண் யானையை பரிசளித்துள்ளார். அந்த யானை சமீபத்தில் 2013ல் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது. ஜெயலலிதா, சிவாஜிக்கு முன்பே இதை 1949ல் செய்தவர் ஜவஹர்லால்நேரு அவர்கள் தானாம். ஜப்பானுக்கே யானையை பரிசளித்து நட்புறவு அடையாளமாக அனுப்பி வைத்திருக்கிறார். அங்குள்ள குழந்தைகளுக்கு இந்த பரிசை வழங்கியுள்ளார் ஜவஹர்லால் நேரு அவர்கள்.

