57 வயது நடிகருடன் 5 வது திருமணம்! 26 வயதான நடிகை செய்த செயலால் ஷாக்காகும் ரசிகர்கள்..

wedding hollywood nicoals riko
By Jon Mar 11, 2021 01:02 PM GMT
Report

சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை பற்றி பெரியளவில் பேசப்பட்டு வரும். அதேசமயம் தம்பதியினரின் ஜோடி பற்றி வித்யாசம் தெரிந்தால் அது சர்ச்சையில் முடியும். அந்தவகையில் அமெரிக்க நடிகர் ஒருவர் தன்னைவிட 31 வயது குறைந்த நடிகையை 5வது முறையாக திருமணம் செய்தது ஹாலிவுட் வட்டாரத்தி அதிர்ச்சியை கிளப்புயுள்ளது.

26 வயதுடைய ரிக்கோ சிபாடா என்ற நடிகை ஹாலிவுட்டில் கோஸ்ட் ரைடர், த க்ரூட்ஸ், த ராக், லார்ட் ஆப் வார் போன்ற படங்களில் நடித்துள்ள நிகோலஸ் கேஜ்(Nicolas Cage) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகோலஸ் கேஜுக்கு தற்போது 57 வயது ஆகிறது. அவர் தற்போது ஐந்தாவது முறையாக தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவரும் பிரபலமான நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகோலஸ் கேஜ் இதற்கு முன்பாக 1995ஆம் ஆண்டு பாட்ரிசியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து லீசா மேரி என்பவர் 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய வாழ்க்கையில் 3வது திருமணம் தான் நீண்ட நாட்கள் தாக்குப் பிடித்தது. கிட்டத்தட்ட 12 வருடங்கள் அலைஸ் கிரீம் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடைசியாக 2019 ஆம் ஆண்டு எரிக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரை அடுத்த நான்கு நாளில் விவாகரத்து செய்துவிட்டார். தற்போது ரிக்ரோ சிபாடா என்பவரை ஐந்தாவது முறையாக திருமணம் செய்துள்ளார்.