கைநடுக்கத்துடன் வந்த விவகாரம்!! எல்லாத்துக்கும் டாட் வைத்த நடிகர் விஷால்..
விஷால் - மதகஜராஜா
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடிப்பில் மதகஜராஜா படம் உருவாகியது. இப்படம் பல ஆண்டுகள் கழித்து ஜனவரி 12 இன்று வெளியாகியுள்ளது.
படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், விஷால் மதகஜராஜா படத்தின் பிரஸ் மீட்டில் கைநடுக்கத்துடன் வந்தது பெரியளவில் பேசப்பட்டு வந்தது. அவர் உடல் நிலை குறித்து பல விதங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தன.
டாட் வைத்த விஷால்
இந்நிலையில் ப்ரிவ்யூ ஷோ நேற்று நடந்த நிலையில், விஷால், உடல்நிலை குறித்து முற்றுப்புள்ளி வைத்து பேசியுள்ளார். எல்லோருக்கும் வணக்கம் ஜனவரி 11 ஆம் தேதி மதகஜராஜா ப்ரீமியர் நடந்திருக்கும், ஜனவரி 12 படம் வெளியாகுது, 12 ஆண்டுகள் கழித்து 12 ஆம் தேதியே படம் வெளியாகுது.
12 ஆண்டுகளுக்கு முன் இருக்கிற படம் மாதிரியே தெரியல, புதுப்படம் மாதிரி இருக்கு. எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் கனடாவில் இருந்தும் கூட எனக்கு கால் செய்து நான் அப்போலோவில் அட்மிட்டாகியிருக்கேன்னு என் உடல்நிலை குறித்து தப்பான தகவல்கள் வெளிவந்தது.
அப்படிலாம் ஒன்றும் இல்லை, எனக்கு கடுமையான காய்ச்சல்தான். அன்னைக்கு என்னால் முடியல, ஆனாலும் இத்தனை வருடம் கழித்து படம் வருது. சுந்தர் சி சார் முகம் பார்க்கணும், அந்த பங்கஷனை மிஸ் செய்யக்கூடாதுன்னு எப்படியாவது முடிஞ்ச அளவு அட்டெண்ட் செஞ்சேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.