ரஜினிக்கு தங்கை..52 வயதாகியும் திருமணமாகாத 90ஸ் நடிகை...
நடிகை சித்தாரா
90-களில் அனைத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சித்தாரா. கேரளாவின் கிளமானூரில் பிறந்த சித்தாராவின் தந்தை மின்வாரிய பொறியாளராகவும் தாய் மின் வாரியத்தில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்கள்.

சித்தாராவுக்கு பிரதீஷ், அபிலாஷ் என்ற இரு தம்பிகள் இருக்கிறார்கள். காவேரி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய சித்தாரா, மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்த காவேரி படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
தன்னுடைய 13வது வயதில் நடிக்க ஆரம்பித்த சித்தாரா, ஓரிடாத், பொண்ணு, முக்தி, ஆர்யன், பாதபுத்ரா போன்ற மலையாள படங்களிலும் 1989ல் கே பாலசந்தர் இயக்கத்தில் உருவான புதுபுது அர்த்தங்கள் படத்தில் நடித்து தமிழிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில், உன்னை சொல்லி குற்றமில்லை, புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல், அர்ச்சனா ஐஏஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். படையப்பா படத்தில் ரஜினியின் தங்கை ரோலில் நடித்து அனைவரது மனதை ஈர்த்தார் சித்தார்.
சமீபத்தில் பகத் பாசில் - வடிவேலு நடித்த மாரீசன் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். 52 வயதை எட்டியிருக்கும் சித்தாரா, இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.
தந்தை இறப்புக்கு பின் குடும்ப பொறுப்புகளை சமக்க வேண்டிய சூழல் ஏற்பட, அப்பாவின் ஆசைப்படி அவரது தம்பியை மருத்துவராக்கி அழகு பார்த்தார். மறுபுறம் ஒரு காதல் இருந்ததாகவும், அந்தக்காதல் தோல்வியில் முடிய, அதுவே திருமணம் செய்யாமல் இருக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.