ஹனி ரோஸிடன் அத்துமீறிய வழக்கு!! மன்னிப்பு கேட்ட 800 கோடி தொழிலதிபர்..

Sexual harassment Gossip Today Indian Actress Businessman Actress
By Jai Jul 02, 2026 02:30 AM GMT
Report

ஹனி ரோஸ்

நடிகை ஹனி ரோஸ், கடந்த 2025 ஜனவரி மாதம் கண்ணூர் அலக்கோடு பகுதியில் உள்ள பாபி செம்மனூர் ஜுவல்லரியின் கிளை ஒன்றின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அந்த மேடையில் பாபி செம்மனூர், ஹனி ரோஸின் அனுமதியின்றி அவருடைய கையை பிடித்து சிற்றி, வலுக்கட்டாயமாக நெக்லஸ் அணிய முயன்றதாக கூறி புகாரளித்தார்.

அதுமட்டுமின்றி அடுத்தடுத்து பல்வேறு சோசியல் மீடியாக்களிலும் அவரை பற்றி பாலியல் ரீதியான கருத்துக்களையும், அநாகரீகமான விமர்சனங்களையும் பாபி சென்னனூர் முன்வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஹனி ரோஸிடன் அத்துமீறிய வழக்கு!! மன்னிப்பு கேட்ட 800 கோடி தொழிலதிபர்.. | Honey Rose Receives Apology From Businessman

உடனே இதையறிந்த ஹனி ரோஸ், பண பலமும் செல்வாக்கும் இருக்கிறது என்பதால் எந்த பெண்ணையும் இழிவுப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. அப்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் வரை இவ்விவகாரத்தை கொண்டு சென்றார் ஹனி ரோஸ். கொச்சி போலிசாரிடம் புகாரளித்ததை அடுத்து சிறப்பு தனிப்படை போலிசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை நடத்தினர்.

ஹனி ரோஸிடன் அத்துமீறிய வழக்கு!! மன்னிப்பு கேட்ட 800 கோடி தொழிலதிபர்.. | Honey Rose Receives Apology From Businessman

பாபி வயநாடு மேப்பாடியிலுள்ள அவரது எஸ்டேட் ரிசார்ட்டில் தங்கியிருப்பதை அறிந்து தனிப்படை போலிசார் அங்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர். ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பின் கொசி கோர்ட்டில் ஜாமீன் கோரிய பாபியின் மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதுமே திடீர் மயக்கம் ஏற்பட்டு எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின் காக்கநாடு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஹனி ரோஸை அவதூறாக பேசிய 20க்கும் மேற்பட்ட யூடியூபர்களும் கைதாகினர். இதனைதொடர்ந்து கேரள ஹைகோர்ட் பாபி செம்மனூருக்கு ஜாமீன் அளித்தது. ஆனால் பொதுவெளியில் மற்றவர்களை அவதூறாக பேசுவதையும், சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை கிளப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்று கண்டனத்தை பதிவிட்டது.

பாபி செம்மனூர் மன்னிப்பு

இச்சம்பவம் ஒன்றரை வருடமான நிலையில் பாபி செம்மனூர் தன்னுடைய ஃபேஸ்புக் தளத்தில் உருக்கமான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஹனி ரோஸிடன் அத்துமீறிய வழக்கு!! மன்னிப்பு கேட்ட 800 கோடி தொழிலதிபர்.. | Honey Rose Receives Apology From Businessman

அதில், நான் எப்போதும் எல்லாரிடமும் மரியாதையாகவும், அன்புடனும் நடக்ககூடியவன். யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. என் வார்த்தைகளால் ஹனி ரோஸ், அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட வேதனைகளுக்கு நான் முழுப்பொறுப்பேற்று, மனம் திறந்து பகிரங்க மனிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய இந்த உண்மையான மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெறுவார் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.