அஜித்தால் தீக்குளிக்க முயன்ற பெண்! மனைவி ஷாலினி உதவியும் பழிவாங்க துடிக்கும் நிலை..இதுதான் காரணமாக இருக்குமோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சமீபகாலமாக அஜித் பற்றி சில தவறான விஷயங்களை வெளியிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் அஜித்தின் வீட்டிற்கு முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்து போலிசார் தடுத்துள்ளனர். அப்பெண் வேறு யாருமில்லை, அஜித் மற்றும் நடிகை ஷாலினி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு பணியாற்றிய ஒருபெண் வீடியோ எடுத்து சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.
இதனால் அஜித் தரப்பில் இருந்து அந்த வீடியோவை அழிக்க கேட்டுக்கொண்டனர். இதனால் அந்த நிர்வாகம் அப்பெண்னை வேலையை விட்டு இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து எங்கு சென்றாலும் வேலை கிடைக்கவில்லை என்று அஜித் தர்ப்பினருக்கு கோரிக்கை வைத்துள்ளார் அப்பெண். நடிகை ஷாலினி உதவியால் நிர்வாகத்தினரிடம் பேசி மீண்டும் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
ஆனால் அப்பெண் வேறு ஒரு தவறை மருத்துவமனையில் செய்ததால் மீண்டும் வேலையை விட்டு தூக்கியுள்ளனர். இதன்பின் அஜித்திற்கு மனைவி ஷாலினிக்கும் இதுபற்றிய தொடர்பு இல்லை என்று கூறியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அப்பெண்ணின் சான்றிதழ்களை கொடுக்காமல் இருந்துள்ளதால் வெளியில் வேலை கிடைக்காமல் இருந்ததால் தான் அஜித் விட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அப்பெண் தீக்குளிக்கும் போது மீடியா மற்றும் போலிசார் எப்படி உடனே வந்தனர் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதனால் அஜித்தின் பெயரை கெடுக்க யாரோ ஒருவர் அப்பெண்ணை தூண்டி இப்படி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.