குக் வித் கோமாளி 6 - ல் மணிமேகலையை தாக்கி பேசினாரா ரக்ஷன்? தொடங்கிய பஞ்சாயத்து
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி, சிரிக்காதவர்களை கூட குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில், கடந்த 2019ம் ஆண்டு பார்திவ் மணி இயக்கத்தில் முதல் சீசன் தொடங்கப்பட்டது.
முதல் சீசன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்க, அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வருடம் இந்த சீசனில் மணிமேகலையும் தொகுப்பாளராக இருந்தார்.
ஆனால் ஷோவில் போட்டியாளராக இருந்த VJ பிரியங்கா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மணிமேகலை வெளியேறிவிட்டார். அது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் ஷோவையும் ப்ரியங்காவையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.
தற்போது குக் வித் கோமாளி 6ம் சீசன் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனை ரக்ஷன் மட்டும் தொகுத்து வழங்குகிறார்.
தொடங்கிய பஞ்சாயத்து
இந்நிலையில், நேற்று தொடங்கிய குக் வித் கோமாளி 6ல் தொகுப்பாளர் ரக்ஷன் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், 'கடந்த 5 சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் இருந்து யார் போனாலும் கவலை பட்டதே இல்லை, ஆனால் இந்த சீசனில் யார் போனாலும் கவலைப்படுவேன்' என பேசி இருக்கிறார். தற்போது, மணிமேகலையை தாக்கி தான் அவர் இப்படி பேசினாரா? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.