பிக் பாஸ் சென்று, தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. பிரபலம் கொடுத்த ஷாக்
பிக் பாஸ்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ஷோ தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இறுதி வாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பொதுவாக பிக் பாஸ் போட்டியாளராக கலந்துகொண்டால் புகழின் உச்சிக்கே சென்று விடலாம் என்ற எண்ணத்தில் பலரும் போட்டியாளராக வருகின்றனர். அது உண்மையாகவே நடந்துள்ளது.
ஆனால், சிலர் இந்த ஷோவில் கலந்துகொண்டதற்காக அதிக ட்ரோல்களை சந்தித்தவர்களும் இருக்கிறார்கள். அதில், பிரபல தொகுப்பாளர் அர்ச்சனாவும் ஒருவர்.
அவர் பிக் பாஸில் செய்த விஷயங்களுக்காக சமூக வலைத்தளங்களில் அதிகமான நெகடிவ் கமெண்டுகளை பெற்றார். நீண்ட காலமாக அது தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.
ஷாக்கிங் தகவல்
இது குறித்து அர்ச்சனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், " பிக் பாஸ் சென்று வந்த பின் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவெடுக்கும் அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்தேன்.
தற்போது நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் அர்ஜுன் (தங்கையின் கணவர்) தான்" என அர்ச்சனா பேட்டியில் கூறி இருக்கிறார்.