கரியரே முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க ஆனால் அடுத்த நாளே.. மேடையில் மாஸ் காட்டிய VJ மணிமேகலை
VJ மணிமேகலை
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ மணிமேகலை. இவருக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நல்ல வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தி கொடுத்தது.
கோமாளியாக மக்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்த மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக வந்தார். இதன்பின் நடந்த சில பிரச்சனைகள் காரணமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறினார்.
அதன் பின், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
மணிமேகலை ஓபன்
சமீபத்தில் விருது விழா மேடை ஒன்றில் மணிமேகலை பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் "எனக்கு பிடித்த தொகுப்பாளினி வேலையையே என் வாயில் இருந்து வேண்டாம் என்று சொல்ல வைத்தனர். அது போன்று உங்க கரியரே முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க. ஆனா அந்த பிரச்சனைக்கு அடுத்த நாளே எனக்கு ஜீ தமிழ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது". என கூறியுள்ளார்.