ஓட்டல் படுக்கையறையில் ஹிட்டன் கேமரா.. நடிகையின் பின்புறம் தட்டிய நபர்!! ஓப்பனாக பேசிய பிரபல நடிகை..
தெலுங்கு கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை க்ரித்தி கர்பந்தா. 2017ல் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ப்ரூஸ்லி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகினார். அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் அக்கடதேசத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கன்னட படம் ஒன்றில் நடித்துகொண்டிருந்த போது தங்கிருந்த ஓட்டல் அறையில், அங்கு வேலை செய்த பையன் என் அறையில் கேமராவை வைத்துவிட்டு சென்றிருக்கிறான். ஓட்டலில் தங்கினால் இதுபோன்ற கேமரா எதுவும் இருக்கிறது என்று சோதிப்பது எனக்கு என் குழுவுக்கும் வழக்கம் தான்.
அப்படி அந்த அறையில் செட்டாப் பாக்ஸ் பின் அவன் என் அறையில் கேமரா வைத்துள்ளது கண்டுபிடித்தோம் என்று க்ருத்தி கூறியிருக்கிறார். மேலும் என்னிடம் போட்டோ எடுக்க வந்த ஒருவர் என்னுடன் போட்டோ எடுத்துவிட்டு என்னை கிள்ளிவிட்டு ஓடி விட்டான்.
அதேபோல் ரோட்டில் சென்றபோது பைக்கில் வந்த ஒருவன் என் பின்னால் தட்டிவிட்டு சகஜமாக சென்றான் என்று கூறியுள்ளார் நடிகை கிருத்தி கர்பந்தா.