குளியலறையில் பணத்தை பதுக்கிய மாலா சின்ஹா!! ஒரேவொரு பொய்யால் ஓவர் நைட்டில் காலியான நடிகை..
மாலா சின்ஹா
இந்தி, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட மொழிகளில் 1950, 60, 70களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாலா சின்ஹா. பல வருட சினிமா வாழ்க்கையில் பல வெற்ற்களை படைத்த மாலா, தான் சொன்ன ஒரு பொய்யால், தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கே முடிவுரை எடுத்திக்கொண்டார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் சேகுவாரா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

குளியலறையில் பணம்
அதில், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக மாலா சின்ஹா திகழ்ந்தார். ஆண் நடிகர்களுக்கு இணையாக அல்லது அவர்களை விடவும் அதிகமாக சம்பளம் வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார் மாலா. 1960, முதல் 1970கள் வரையிலான காலக்கட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த மாலா சின்ஹாவின் திரைத்துறை வாழ்க்கையே ஓவர் நைட்டில் தலைகீழாக போய்விட்டது, அவர் சொன்ன ஒரு பொய்தான் அதற்குகாரணம். வருமானத்திற்கு அதிகமாக சம்பாதித்த பணத்திற்கு சரியான கணக்கு காட்ட பயந்தார்.
இதற்காக தன்னுடைய விட்டுக்குள்ளேயே ஒரு சுவரை எழுப்பி, முக்கியமாக பாத்ரூமிற்குள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மூட்டைமூட்டையாக பதுக்கி வைத்தார் மாலா சின்ஹா. இந்த விஷயம் வெளியில் கசிந்துவிட்டது. யார் அதை கசியவிட்டார்கள் என்று தெரியவில்லை. காரணம் அன்று இந்த நடிகை வாங்கிய சம்பளம், அன்றைய உச்ச நடிகர்களின் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது.

இந்த நடிகை மீது அப்போதே கிசுகிசுக்களும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதனால் அப்போது இந்த நடிகை சிக்குவார் என்று பலரும் காத்திருந்தனர். அதேபோல் மாலா சின்ஹாவிடம் கஞ்சத்தனம் இருந்ததாகவும் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கூட சம்பள விஷயத்தில் கறாராக இருந்ததாகவும் ஒருநாள் லீவு போட்டாலும் அதற்கு சம்பளம் பிடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தான் சினிமாவில் நடிக்கும்போது அதற்குரிய பணத்தை கறாராக கேட்டு வாங்கிவிடுவார். அதாவது கஞ்சத்தனத்தாலும், கறார்தனத்தாலும் பணத்தை சேர்த்து கொண்டே வந்தார்.
பாலியல் தொழில்
இப்படியான அதிருப்திகள் நடிகை மீது அதிகரித்து வந்தநிலையில், பாத்ரூமில் பணத்தை பதுக்கி வைத்த விஷயம் கசிய, 1974ல் மாலா சின்ஹாவின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அவர்து வீட்டின் மாத்ரூம் சுவரை உடைத்து, கட்டுக்கட்டாக பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது இவ்வளவு மிதமிஞ்சிய கோடிக்கணக்கான பணத்தை எப்படி சம்பாதித்தீர்கள்? என்று அதிகாரிகள் கேட்டதற்கு, தான் பாலியல் தொழில் செய்து சம்பாதித்ததாக சொன்னாராம். இப்படியொரு பதிலை சொன்னால் பணத்தை அதிகாரிகள் திருப்பி தந்துவிடுவார்கள் அல்லது அனுதாபம் ஏற்பட்டுவிடும் என்று யாரோ, மாலாவிடம் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்படி அவரும் வாக்குமூலம் சொல்ல, பணமும் கிடைக்கவில்லை அனுதாபமும் கிடைக்கவில்லை.

அவர் அன்று அதிகாரிகளிடம் பொய் சொன்னதால், சினிமா சான்ஸே மொத்தமாக மாலா சின்ஹாவுக்கு காலி செய்துவிட்டது. ஒரு கதாநாயகி இப்படி பகிரங்கமாக அறிவிக்கவும், அவரது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. குடும்பபாங்கான படங்களில் நடித்து வந்த மாலா, அதன்பின் தொடந்து நடிக்கமுடியவில்லை.
இந்த ஒரு பொய் அவரது ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையை ஒரே இரவில் முடிந்துவிட்டது. இதன்பின் பல நடிகைகள் தங்களை வருமான வரி சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல், மேனேஜர்கள் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பினாமியாக போட்டு பாதுகாக்க தொடங்கினர் என்று சேகுவாரா தெரிவித்துள்ளார்.