ஓவர் நைட்டில் திரிஷா ஹீரோயினாக காரணமே இதுதான்!! உண்மையை கூறிய பிரபல நடிகர்..
திரிஷா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகர் திரிஷா நடிப்பில் பல படங்கள் இந்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது. அஜித்குமாருடன் விடாமுயற்சியில் நடித்திருந்த திரிஷா, ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் தக் லைஃப், விஸ்வரம்பரா உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து பிஸியாக இருந்து வருகிறார். 41 வயதில் தன்னுடைய நடிப்பால் பல கோடி ரசிகர்களை ஈர்த்து வரும் திரிஷா, இந்த இடத்திற்கு எப்படி வந்தார் என்ற காரணத்தை பிரபல மூத்த நடிகர் ராதா ரவி கூறியிருக்கிறார்.
ராதா ரவி
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், லேசா லேசா படத்தின் ஷூட்டிங்கின் போது அந்த படத்தில் நடிக்க இருந்த ஹீரோயின் மும்பையில் இருந்து வர வேண்டும். ஆனால் அந்த பெண்ணால் சில காரணங்களால் வரமுடியவில்லை. இந்த சூழலில் அங்கிருந்த ஆறு, ஏழு பெண்களில் திரிஷா நல்லா இருந்ததால் அவரை ஹீரோயினாக நடிக்க வைத்தார்கள். இதனால் ஒரே நைட்டில் திரிஷா ஹீரோயினாக லேசா லேசா படத்தின் மூலம் மாறிவிட்டார். வாழ்க்கையில், எல்லாமே டக்கு டக்குன்னு மாறும், இதுதான் விதி என்று எழுதப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்றமுடியாது என்று ராதா ரவி தெரிவித்துள்ளார். மும்பையில் இருந்து வரமுடியாத அந்த நடிகையால் திரிஷா தற்போது உச்சக்கட்ட ஹீரோயினாக தென்னிந்திய சினிமாவில் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.