குஷ்புவால் கெட்ட பிரபு!! அவரை போல் பெண்ணால் கெட்ட சிவகார்த்திகேயன்!! பிஸ்மி..
தமிழ் சினிமாவில் தற்போது பல விசயங்கள் பூதகரமாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்சூர் அலிகான், நடிகை திரிஷாவை பற்றி கொச்சையாக பேசியதில் ஆரம்பித்து பிக்பாஸ் 7ல் விசித்ரா தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் வரை இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க சிவகார்த்திகேயன் - டி இமான் சர்ச்சை சம்பவமும் இடையில் பேசப்பட்டும் வருகிறது.
சிவகார்த்திகேயன் குறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திரைத்துறையில் அவருக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. எல்லோருக்கும் ஒரு இமேஜ் இருக்கிறது. அந்த இமேஜின் ஏதாவது ஒரு கீரல் விழுந்தால் நிச்சயமாக அவர்களின் திரையுலகை பாதிக்கும்.
உதாரணமே நடிகர் பிரபு தான். பெரியளவில் இருந்த பிரபுவுக்கும் குஷ்பூவுக்கு இடையில் காதல் முறிவு ஏற்பட்டது. அப்போது வெளிப்படையாக நடிகை குஷ்பூ அறிவித்ததால் ஊடகம் முழுவதும் அதை பேசினார்கள்.
இதன்பின் பிரவுவின் சினிமா வாழ்க்கை உடைந்ததாகவும் அவர் பற்றி இமேஜ் இந்த செய்தி காலி செய்துள்ளது. சிம்பு, தனுஷ் பற்றி எங்கு போனாலும் மக்களுக்கு தெரியும். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இருந்த இமேஜ் வேற.
அவர் இன்னொருவரின் வாழ்க்கையில் விளையாடுகிற அளவிற்கு மோசமான இருக்கிறார் என்ற தகவல் வெளியாகும் போது அவருக்கு பின்னடைவை கொடுக்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை. அயலான் படம் வரும் போது தான் கண்கூடாக பார்க்க முடியும் என்று கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் பிஸ்மி.