கோடிக்கணக்கில் கடன்!! கல்லா கட்ட புது தொழிலை ஆரம்பித்த சிவகார்த்திகேயன்..
சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் சுமார் 10 ஆண்டுகளாக நடிகராக நடித்து உச்சத்தை கண்டு வருபவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த படங்கள் மூலம் வெற்றியை கண்ட சிவகார்த்திகேயன் ஒருசில படங்களை தயாரித்ததால் பல கோடியில் கடன் பிரச்சனையை சந்தித்துள்ளார்.
சுமார் 80 கோடி அளவில் கடனில் மாட்டுக்கொண்ட சிவகார்த்திகேயன் அந்த கடனை அடைக்க பல வழிகளை தேடிக்கொண்டிருக்கிறார். தற்போது சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றினை கட்டும் முடிவில் இருக்கிறாராம்.
மாவீரன் மற்றும் அயலான் படத்தின் வெளியீட்டுக்கு முன் 33 கோடி செலுத்திய நிலையில் மீதமுள்ள 10 கோடியை செட்டில் செய்ய வேண்டும் என்று கடனாளிகல் கூறியுள்ளனர். இதனால் மீதமுள்ளம் தொகையான 35 கோடியை மாவீரன் படத்திற்கு பின்பும், படம் வெளியாகும் முன் 10 கோடியையும் தர வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த பிரச்சனையை எல்லாம் முடிக்க லைக்கா நிறுவனம் முன் வந்த நிலையில், அதற்கு ஐடி ரைடு பெரிய அடியை கொடுத்தது. தற்போது அப்படங்களுக்கு உதவ ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கொடுத்துவிட்டாராம்.
அந்த படத்தினை விற்ற காசில் கடனை அடைக்காமல் இப்படியொரு தியேட்டர் தொழிலை ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளாராம். கடன் கொடுத்தவர் இந்த விசயத்தால் புலம்பித்தள்ளியதோடு எதற்கு ரெட் ஜெயண்ட் உதவுகிறது என்று நியாயம் கேட்டு முணுமுணுத்து வருவதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
