நீண்டநாள் காதலருடன் நிச்சயத்தார்த்தம்!! 39 வயதில் திருமணத்திற்கு ரெடியாகும் நடிகை ஹுமா....
ஹுமா கிரேஷி
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஹுமா கிரேஷி. தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்திலும் அஜித் குமாரின் வலிமை படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
தற்போது இந்தியில் 5 மொழிகளில் நடித்து வரும் ஹுமாவுக்கு தற்போது 39 வயதாகிறது. இந்த வயதில் திருமணம் செய்யாமல் படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

நிச்சயத்தார்த்தம்
இந்நிலையில் தன்னுடைய நீண்டநாள் காதலர் ரஷித் சிங் என்பவருடன் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை ஹுமா குரேஷி முடித்துள்ளதாக பாலவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.
ரஷித் சிங், பல முக்கிய பாலிவுட் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுப்பவராக பணியாற்றி வருபவர். சில படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து ரஷித் சிங்கை நடிகை ஹுமா குரேஷி சில வருடங்களாக காதலித்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது நிச்சயம் முடித்துள்ளார் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. விரைவில் இருவரும் திருமண செய்தியை அறிவித்தால் தான் உண்மை என்னவென்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.