36 வயதான அஜித் பட நடிகையா இது?.. குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை அனுஷ்கா செட்டி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடிப்போட்டு கொடிக்கட்டி பறந்து வந்தார்.
அனுஷ்கா செட்டி
அப்படி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் கனவுக்கன்னி நடிகையாகவும் திகழ்ந்து வந்த அனுஷ்கா செட்டி சைஸ் ஹீரோ (இஞ்சி இடுப்பழகி) படத்தின் மூலம் உடலை ஏற்றி குண்டாகி நடித்தார்.
அப்படத்திற்கு பிறகு உடலை குறைக்கமுடியாமல் திண்டாடி வந்த அனுஷ்கா இதனால் பட வாய்ப்புகளையும் திருமண வாய்ப்புகளையும் இழந்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.
ஹூமா குரேஷி
அவரை போல் அஜித் பட நடிகை ஒருவர் பெரிய ரிஸ்க்கை எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஹூமா குரேஷி டபுள் எக்ஸல் என்ற படத்திற்காக படுமோசமான குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றாலும் ஹூமா குரேஷி இப்படி உடலை ஏற்றிருப்பது பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் வலிமை படத்தில் ஹூமா குரேஷி நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு ரிஸ்க் எடுத்துள்ள ஹூமா குரேஷியை பலர் பாராட்டியும் வருகிறார்கள்.

