அதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை!! நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்..

Nidhhi Agerwal Tamil Actress Actress The Raja Saab
By Edward Mar 05, 2026 07:30 AM GMT
Report

நிதி அகர்வால்

ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன், கலகத் தலைவன், ஹரி ஹர வீர மலு, கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் ரிலீஸான தி ராஜா சாப் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் நிதி அகர்வால். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

அதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை!! நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்.. | I Cant Control Myself My Weight Nidhhi Agerwal

உடல் எடை அதிகரித்து

சமீபத்தில் நிதி அகர்வால் அளித்த பேட்டியொன்றில், உடல் எடை அதிகரித்து காணப்படுவது குறித்து பேசியிருக்கிறார். அதில், திடீரென உடல் எடை அதிகரித்து காணப்படுகிறீர்கள், திடீரென வெகுவாக எடை குறைக்கிறீர்கள் என்று பலரும் என்னை கேட்பார்கள்.

என் உடல் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. அது என்னவென்று என்னால் உணர முடியவில்லை. என்னை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன். அந்த நிலையை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். எனவே சரியான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள தொடங்க உள்ளேன் என்று நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.