சூர்யாவை எனக்கு சுத்தமாக பிடிக்காது!! உண்மையை கூறி கோபப்பட்ட பிரபல பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அவரது 42 வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகரை தாண்டி சூர்யா மனிதாபிமானத்தோடு இருக்கும் மனிதர் என்று பலர் புகழப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் சமீபகாலமாக சூர்யா மும்பை சென்று அங்கு பங்களா வாங்கு அப்பாவை விட்டு மனைவி ஜோதிகாவுடன் செட்டிலாகிவிட்டார் என்ற விமர்சனம் இணையத்தில் பலரால் கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளரும் வலை பேச்சு அந்தணன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சூர்யா பற்றிய சில விசயங்களை பகிர்ந்துள்ளார். இணையத்தில் சூர்யா, ஜோதிகா வடக்கில் செட்டிலாகிவிட்டதால் அவர்களை வடக்கன் ஆகிவிட்டார்கள் என்ற கடுமையான விமர்சனம் சென்று கொண்டிருப்பதை கேள்விப்பட்டேன். மேலும் கீழடிக்கு சென்று முறையாக டிக்கெட் வாங்காமல் அவர்களால் பள்ளி மாணவ மாணவிகள் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவமும் கேள்விப்பட்டேன்.
இதனை குறிப்பிட்டு, ஏன் சூர்யா மும்பையில் வீடு வாங்கக்கூடாது? ஷூட்டிங் முடிந்து சென்னை வந்து வந்து தான் செல்கிறார். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை எதுக்கு வலிக்கிறது என்று கூறி கோபப்பட்டுள்ளார் அந்தணன். மேலும், ஒரு நடிகராக சூர்யாவை எனக்கு பிடிக்காது.
ஓவர் ஆட்டிடியூட் அவரது நடிப்பில் இருப்பது தான் அதற்கு காரணம். அதனால் அவர் நடிப்பு எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் ஒரு மனிதராக சூர்யா மிகவும் நல்லவர் தான். அவர் 5000 மாணவர்களை அகரம் வழியாக படிக்க வைத்து வருகிறார்.
எத்தனையோ நடிகர்கள் சம்பாதிக்கும் பணத்தை எங்கங்கோ கொட்டி வருகிறார்கள். ஆனால் சூர்யா பல நல்ல விசயங்களை செய்து வருகிறார். சமுகத்தில் அக்கறை கொண்ட சூர்யாவை இப்படி விமர்சிப்பது தவறு தான் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.