விக்னேஷ் சிவன் பற்றி சொல்லுவேன்..ஆனால் நயன் தாராவுக்காக!! நடிகை சோனா ஓபன் டாக்...
சோனா - ஸ்மோக்
நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கையை மையப்படுத்தி ஸ்மோக் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இரு சிசன்களாக உருவாகியுள்ள இந்த தொடரில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் 99 சதவீத உண்மையை மட்டுமே பதிவு செய்ததாக சோனா தெரிவித்தார்.

வெப் தொடரின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் சோனா, விக்னேஷ் சிவன் குறித்து ஒருசில விஷயங்களை ஓபனாக தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன்
அதில், விக்னேஷ் சிவன் என் ஆபிஸில் தான் 3 வருஷம் வேலை செய்தார். எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். அதற்குமேல் டச் இல்லாமல் போய்விட்டது. அவர் பற்றி சில விஷயம் சொல்லிவிடுவேன்.

ஆனால் நயன் தாரா மீது எனக்கு ரொம்பவே மரியாதை இருக்கிறது. நானும் ஒரு பொண்ணும், அவர்களும் என்ன மாதிரி நிறைய கஷ்டப்பட்டு இன்று ஒரு குடும்பமா இருக்காங்க.
அதுக்காக விக்னேஷ் சிவன் கெட்டவன் கிடையாது. ஒருவேளை மறந்துவிட்டானோ, அவன் கெட்ட ஆள் கிடையாது, வாழ்க்கை மாறிவிட்டது அவ்வளவு தான் என்று சோனா தெரிவித்துள்ளார்.