அந்த 7 நாட்கள்..என் வீட்டு நாயை பார்த்தேலே பயமா இருக்கு!! நடிகை ஸ்ரீ ஸ்வேதா..
அந்த 7 நாட்கள்
தமிழில் இயக்குநர் எம் சுந்தர் இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவுள்ள படம் தான் அந்த 7 நாட்கள். கே பாக்யராஜ், ஆஜித்தேஜ், ஸ்ரீஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் சிறப்பு திரையிடல் சென்னையில் நடந்துள்ளது.
விழாவில் படத்தின் கதாநாயகியான ஸ்ரீ ஸ்வேதா, படத்தில் வெறிநாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிகப்பட்டு 7 நாட்களில் இறந்துவிடுவதாக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
ஸ்ரீ ஸ்வேதா
இதுகுறித்து ஸ்ரீ ஸ்வேதா அளித்த பேட்டியில், இந்த படத்தில் நடித்ததற்கு பின் நாய்களை பார்த்தாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. என் வீட்டு நாய் அருகில் கூட செல்லவே பயமாகத்தான் இருக்கிறது.
இதுபோன்ற கதைகளில் நடிகைகள் பலர் நடிக்க தயங்குவார்கள், எப்படி நீங்கள் நடித்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீ ஸ்வேதா, அதற்கு திறமையை நிரூபிப்பது தானே நடிப்பு, அதற்கான இடத்திற்குதானே காத்திருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.