கணவர் கைகளில் நரகத்தை கண்டேன்..என் வாழ்க்கை நாசமாகியது!! நடிகை நைனா கங்குலி வேதனை..
நைனா கங்குலி
பெண்களுக்கு பலருக்கும் சைக்கோ காதலன் மற்றும் கண்வன் கைகளில் சிக்கி பல்வேறு கொடுமைக்களுக்கும் சித்ரவதைகளுக்கும் ஆளாகி வருகிறார்கள். ஆணுக்கு நிகரான்க அனைத்து துறையிலும் பெண்கள் முன்னேறி வந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் வருகிறது.
சொல்ல முடியாத கொடுமைகளுக்கு சினிமாத்துறையை சேர்ந்த பல நடிகைகளும் இப்படியான சம்பவத்தை சந்தித்து வருகிறார்கள்.
வாழ்க்கையே நாசமாகியது
இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய வங்க வீதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை நைனா கங்குலி. முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து ரத்னகுமாரி என்ற படத்திலும் நடித்து பிரபலமானார்.
தற்போது தனக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பரிதாப நிலையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை நைனா கங்குலி. அதில், என் காதலனின் கைகளில் நான் நரகத்தை கண்டேன்.
நடன இயக்குநரான அவர் என்னை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார். ஒவ்வொரு நிமிடமும் எனக்கு பயங்கரமாக இருந்தது. என் வாழ்க்கையே நாசமாகியது. நான் காதலில் விழுந்ததற்கு தகுதியான தண்டனை கிடைத்தது.
என் தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகளுக்காக நான் ஹைதராபாத்தை விட்டே வெளியேறினேன். என்னைப்போன்று கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்கள் அத்தகைய உறவிலிருந்து வெளியேற வேண்டும் என்று நைனா கங்குலி தெரிவித்துள்ளார்.