Filmfare விருதுகள் என் பண்ணைவீட்டு கழிவறையில்!! அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்..

Gossip Today Actors Bollywood National Film Awards
By Edward May 31, 2025 02:30 PM GMT
Report

நடிகர் நசீருதீன் ஷா

பாலிவுட் சினிமாவில் மூத்த நடிகராக திகழ்ந்து பல விருதுகளுக்கு சொத்தக்காரராக இருப்பவர் நடிகர் நசீருதீன் ஷா. சமீபத்திய பேட்டியொன்றில் தான் வாங்கிய விருதுகள் பற்றி ஒரு அதிர்ச்சிகரமான ஒரு தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Filmfare விருதுகள் என் பண்ணைவீட்டு கழிவறையில்!! அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்.. | I Use Filmfare Awards Toilet Handles At Home Actor

அவர் கூறிகையில், ஒரு காதாபாத்திரத்தை சித்தரிப்பத்ற்காக தன் வாழ்க்கையையும் முயற்சியையும் அர்பணித்த எந்தவொரு நடிகரும் ஒரு நல்ல நடிகர். நீங்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து, இந்த ஆண்டின் சிறந்த நடிகர் இவர்தான் என்று சொன்னால் அது எந்தளவிற்கு நியாயமாக இருக்கும்.

Flim Fare விருது

தான் தற்போது விருதுவிழாக்களில் கலந்து கொள்வதை நிறுத்துவிட்டதாகவும் கடைசியாக வழங்கப்பட்ட இரு Flim Fare விருதுகளை வாங்கக்கூட செல்லவில்லை என்று ஷா தெரிவித்துள்ளார். மேலும் அந்த விருதுகளை பற்றி நான் பெருமைப்படவில்லை. அதனால் நான் ஒரு பண்ணை வீடு கட்டியபோது இந்த விருதுகள் அனைத்தையும் அங்கே வைக்க முடிவு செய்தேன்.

கழிப்பறைக்கு செல்லும் எவருக்கும் தலா இரண்டு விருதுகள் கிடைக்கும், ஏனென்றால் கழிப்பறையில் உள்ள அனைத்து கைப்பிடிகளும் filmfare award தான்.

Filmfare விருதுகள் என் பண்ணைவீட்டு கழிவறையில்!! அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்.. | I Use Filmfare Awards Toilet Handles At Home Actor

இந்த கோப்பைகளில் எனக்கு எந்த மதிப்பும் தெரியவில்லை, நான் முதன்முதலில் கோப்பைகளை பெற்றபோது மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் பின் என்னைச்சுற்றி கோப்பைகள் குவிய ஆரம்பித்தன. இந்த விருதுகள் எல்லாம் பரப்புரையின் விளைவுதான் என்பதை பின் உணர்ந்தேன்.

ஒருவர் இந்த விருதுகளை பெறுவது அவர்களின் தகுதியின் காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நான் அவற்றை கைவிட ஆரம்பித்தேன் என்று கூறியிருக்கிறார்.