மோடியா? ராகுலா? நான் வாழ ஆசைப்படுகிறேன்!! நக்கலாக பதிலளித்த நடிகை டாப்ஸி...

Taapsee Pannu Rahul Gandhi Narendra Modi Actress
By Edward Feb 16, 2026 05:30 AM GMT
Report

நடிகை டாப்ஸி

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை டாப்ஸி பண்ணு. நடிகையை தாண்டி நக்கலான பெண்மணியாகவும் இருப்பவர் தான் டாப்ஸி.

கடந்த 20 ஆம் தேதி அவர் நடித்த ஆஷி படத்தின் பிரமோஷனின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நக்கலாக பதிலளித்தது தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

மோடியா? ராகுலா?

அரசியல் தலைவர்களில் நரேந்திர மோடியா? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா? என்ற கேள்வியை முன் வைத்தபோது, நான் இந்த நாட்டிற்குள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், எனவே என்னுடைய பதில் மோடி என்று நக்கலாக பதிலளித்திருக்கிறார்.

இதற்கு முன் பாஜகவினரை ட்ரோல் செய்வது என்றால் அது டாப்ஸிக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். கொரானா காலக்கட்டத்தின்போது பிரதமர் மோடி அனைவரையும் வீட்டு விளக்குகளை அனைத்துவிட்டு, மொட்டைமாடியில், பால் கனியில் விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றுங்கள் என்று கூறியிருந்தார். கைகளை தட்டுங்கள் என்று கூறியிருந்தார்.

அப்போது டாப்ஸி, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், யோ..யோ.. நம் அனைவருக்கும் புதிய வேலை வந்துவிட்டது..யோ..யோ என்று நக்கலாக பதிவிட்டிருந்தார். இவரது இந்த போஸ்ட் அப்போது பலரது கவனத்தையும் ஈர்த்து, மோடியை அட்டாக் செய்வது போல் உள்ளது என்ற கருத்துக்களை பலரும் பதிவிட்டு வந்தனர்.