உடல்கேலிக்கு போட்டோஷூட்டால் பதிலடி கொடுத்த கத்ரீனா கைஃப்!!

Gossip Today Bollywood Indian Actress Katrina Kaif
By Jai Oct 13, 2026 12:30 PM GMT
Report

கத்ரீனா கைஃப்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை கத்ரீனா கைஃப். விக்கி கெளசலை திருமணம் செய்த கத்ரீனா, கடந்த வருடம் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் உடல் எடை கூடிய கத்ரீனா, சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு வந்தார்.

உடல்கேலிக்கு போட்டோஷூட்டால் பதிலடி கொடுத்த கத்ரீனா கைஃப்!! | If I Had Been Afraid Of Criticism Katrina Kaif

அப்போது அவரின் உடல் தோற்றம் குறித்து சோசியல் மீடியாக்களில் கேலி கிண்டல் செய்து வந்தனர். பலரும் கத்ரீனாவுக்கு ஆதரவளித்த நிலையில், விமர்சனங்களுக்கு பயந்திருந்தால், நான் சினிமாவில் இருந்து எப்போதோ காணாமல் போயிருப்பேன்.

சோசியல் மீடியாக்களில் வரும் விமர்சனங்கள் நமது சுயமதிப்பை பாதிக்க ஒருபோதும் அனுமதிக்ககூடாது, இந்த உலகம் சில நேரங்களில் நம்மை பாராட்டும், சில சமயம் விமர்சித்து தாக்கும், இவை அனைத்தையும் கடந்த செல்லும் மனநிலைதான் இப்போது அனைவருக்கும் முக்கியம் என்று கூறியிருந்தார்.

தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மிகவும் ஸ்டைலிஷ் லுக்கில் வந்துள்ளார். அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கத்ரீனா கைஃப்.

GalleryGalleryGalleryGalleryGallery