நான் பேசினாலே பிரச்சனை..அப்படி நினைப்பது முட்டாள்தனம்!! ரஜினிகாந்த் ஓபன் டாக்..

Kamal Haasan Rajinikanth Simran Raaj Kamal Films International Ashwath Marimuthu
By Jai Jun 24, 2026 12:30 PM GMT
Report

தர்மன்

நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்து முடிந்தது படத்திற்கு தர்மன் என பெயரிடப்பட்டு போஸ்டர் மற்றும் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நான் பேசினாலே பிரச்சனை..அப்படி நினைப்பது முட்டாள்தனம்!! ரஜினிகாந்த் ஓபன் டாக்.. | If I Speak Its Problem Rajinikanth Speech Dharman

படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ரஜினி - கமலுக்கு நடுவில் உட்கார வைத்து பெருமைப்படுத்தினார் சூப்பர் ஸ்டார். படத்தில் நடிகைகள் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

முட்டாள்தனம்!

இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நான் பேசினாலே பிரச்சனைதான், அது எனக்கும் பிரச்சனை, உங்களுக்கும் பிரச்சனை. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள், பேசினால் இதோ பேசிட்டார் என்று அதுக்கும் ஒரு பிரச்சனை செய்வார்கள்.

நான் பேசினாலே பிரச்சனை..அப்படி நினைப்பது முட்டாள்தனம்!! ரஜினிகாந்த் ஓபன் டாக்.. | If I Speak Its Problem Rajinikanth Speech Dharman

ரொம்ப நாள் கழித்துதான் தெரிந்தது, நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது, நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்.

இப்படத்திற்கு முதலில் கே எஸ் ரவிக்குமார் ஃபிக் பண்ணி அதன்பின் 2வதாக சுந்தர் சி பண்ண வேண்டியது. பட டேட் பிரச்சனையால் அவர் விலகிவிட்டார்.

3வதாக சிபி சொன்ன கதை பிடித்தது, ஆனால் ரொம்ப சென்சிட்டிவ் சப்ஜெக்ட் என்பதால் அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம், அது கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைச்சுட்டோம். 4வதாக அஸ்வத் வந்தார் என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.