நடிகருடன் காதல் வலையில் நடிகை பிரியா பவானி சங்கர்.. அப்போ உண்மை காதலரின் நிலைமை

love harish kalyan priya bhavani shankar
By Kathick Oct 23, 2021 10:04 AM GMT
Report

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல் நடிகையாக வலம் வந்து தற்போது சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் ஓமன பெண்ணே எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரியாவுக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.

ரொமான்டிக் காமெடி திரைப்படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் போட்டோஷூட்களில் இருவரும் ரொமான்டிக் போஸ் கொடுத்தது இருவருக்குள்ளும் காதல் என்ற பிம்பத்தை கோலிவுட் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் இருவரும் நீண்ட நாட்கள் பழக்கம் போல் பேசி கொள்வதும் விளையாடி கொள்வதும் அந்த சந்தேகத்தை உறுதி படுத்தி விட்டதாம்.

இப்போது பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் தங்களது காதலை வெளியில் சொல்லாமல் இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த செய்தியை கேட்ட பிரியா பவானி சங்கரின் உண்மை காதலர் செம கடுப்பில் இருக்கிறாராம். நன்றாக போய் கொண்டிருக்கும் காதல் வாழ்க்கையில் இப்படி ஒரு புரளியை கிளப்புவதற்கு என்றே பல பேர் இருக்கிறார்கள் என செம அப்செட்டில் இருக்கிறாராம் ப்ரியாவின் உண்மை காதலர்.