கடைசில இளையராஜாவையே இப்படி ஆக்கிட்டீங்களே! அந்த ஒரு வார்த்தை டோட்டல் டேமாஜ்..

modi ilaiyaraaja isaignani
By Jai Apr 16, 2022 05:20 AM GMT
Report

இந்திய சினிமாவில் இசை ஜாம்பவனாக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா. 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடலுக்கு இசையமைத்து பல சாதனைகளை படைத்து வந்தவர்.

அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வரும் இசைஞானி, சமீபகாலமாக சர்ச்சை பேச்சுக்களையும் நடந்து கொள்ளும் விதத்திலும் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்கள்.

ராயல்டி என்று கூறி தனக்கு நெருக்கமாக இருந்த எஸ்பிபி, மணிரத்னம், வைரமுத்து, கங்கை அமரன் போன்றவர்களை பகைத்து கொண்டார். அதேசமயம் மேடையில் பலரை அவமானப்படுத்தியும் இருக்கிறார் இசைஞானி.

சமீபத்தில் 2018ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதினை இந்திய அரசால் கவுரவிக்கப்பட்டார். தற்போது இசை கச்சேரிகளுக்கு மட்டும் ஆர்வத்தை செலுத்தி வரும் இசைஞானி இளையாராஜா சமீபத்தில் மோடி பற்றிய கருத்துக்கள் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்தில் முன்னுரையை இசைஞானி எழுதியிருக்கிறார். அதில், பிரதமர் மோடியில் செயல்கள் சிறப்பாக இருப்பதாக கூறியதுடன் இதை அம்பேத்கர் பார்த்தால் பெருமைப்படுவார் என்று கூறியுள்ளார்.

மேலும் அம்பேத்கருக்கு நிகராக நடந்து கொண்டு வருகிறார் மோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பலர் எதிர்த்து இளையராஜாவை கேவளமான வார்த்தையை கொண்டு ஹாஷ்டேக்கினை டிரெண்ட்டிங் செய்து வருகிறார்கள். சில என்றும் இளையராஜா என்ற ஹாஷ்டேக்கினையும் பயன்படுத்தி வைரலாக்கி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery