தலைக்கணத்துக்கு பேர் போனவரே இப்படி செய்யலாமா? இசைஞானி செய்த செயலால் கோபத்தில் மக்கள்..
தமிழ் சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 40 ஆயிரம் பாடலுக்கும் மேல் இசையமைத்து 1400 படங்கள், பல ஆயிரம் லைவ் நிகழ்ச்சி என பெரியளவில் சாதனை படைத்தவர். எந்த சூழலுக்கும் இவர் பாடல் இல்லாத இடமே இல்லை.
அப்படியான இளையராஜா ஒருசில சர்ச்சையிலும் சிக்கி பேரை கெடுத்துக்கொண்டும் இருக்கிறார். ஆணவத்தில் ராயல்ட்டிகாக சக கலைஞர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தும் இருக்கிறார். சமீபத்தில் கூட தன் தம்பி கங்கை அமரனை இந்த விஷயத்தினால் 13 வருடங்களாக சந்திக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அம்பேத்கருக்கு நிகர் என மோடியை புகழ்ந்து தள்ளி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். மோடியும் அம்பேத்கரும்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியால் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளுமே முன்னேற்றத்தை கண்டு வருகிறது. உள்கட்டமைப்பு மிகச்சிறப்பாகவும் சமுக நீதி விவகாரத்திலும் பிரதமரின் நடவடிக்கை சிறப்பாகவுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் முத்தலாக் தடை சட்டத்தை இயற்றியதன் மூலம் முஸ்லீம் பெண்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்ஹை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதனால் அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று அதில் குறிப்பிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.
இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து இளையராஜாவஐ திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.