30 வருடத்திற்கு முன் விட்டது! ரஜினிக்கு இளையராஜா வைத்த சைலண்ட் டீல்!
தமிழ் சினிமாவின் இசைஞானி என்று கருத்தப்பட்டு வருபவர் இளையராஜா. பல ஆயிரம் பாடல்களுக்கு சொந்தக்காரராக இருந்து நம்மை பல மனநிலைக்கு ஏற்றவகையில் இசையை கொடுத்துள்ளார்.
இசை தவிர்த்து பின்னணி பாடகராகவும் இருந்து வந்த இளையராஜா தமிழில், கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, ராஜாதி ராஜா, சிங்காரவேலன் போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
பின் 30 ஆண்டுகளாக சினிமாவில் இசையில் கவனம் செலுத்தியதால் தயாரிப்பில் ஈடுபடுவதை நிறுத்தினார். தற்போது மீண்டும் தயாரிப்பில் கலமிரங்கவுள்ளதாக செய்துகள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க இயக்குனர் பால்கி கதையை கூறியிருக்கிறார். ரஜினிகாந்திற்கு கதை ஓகே தான் என்று கூறியுள்ளாராம். இதனை கேட்ட இளையராஜா பால்கி இயக்கத்தில் தயாரிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது.