இளையராஜாவை இன்றுவரை கடவுளாய் பார்த்து நன்றி மறக்காத ஜீவன்! ராஜ் கிரண் செய்த செயல்..

Rajkiran Ilayaraaja
By Edward Apr 23, 2022 06:30 AM GMT
Report

80ஸ், 90ஸ் காலக்கட்டத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் நடிப்பை வெளிப்படுத்தியவர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் அறிமுகமாகிய ராஜ் கிரண் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் ஒருசில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இவர் படங்களில் பெரும்பாலும் இசைஞானி தான் இசையை கொடுத்திருப்பார். அப்படங்கள் எல்லாம் மிகபெரிய ஹிட் தான். ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட படங்களுக்கெல்லாம் தொடர்ந்து இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

இவ்வளவு வெற்றிகளைப் பெற்றுத் தந்த இளையராஜாவிற்கு 60 அடி கட் அவுட் வைத்து உள்ளார். அது மட்டுமின்றி இளையராஜா கையினால்தான் நூறாவது நாள் சீல்டு வாங்குவேன் என்று அடம்பிடித்து அவருக்காக காத்துக் கொண்டிருந்தார்.

இன்றுவரை இளையராஜாவிற்கு கடவுளுக்கு நிகரான மதிப்புக் கொடுத்து வருகிறார் ராஜ்கிரண். இப்படி தன்னை தூக்கி விட்ட இளையராஜாவிற்கு மதிப்பு கொடுத்து நன்றி மறக்காமல் செய்துள்ள மனிதராய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.