ஆணவத்தில் குதித்த இளையராஜா! எஸ்பிபி அவரது மகனிடம் கூறியது இதுதான்! அந்த மனசு இருக்கே?

spb spcharan ilaiyaraaja
By Edward Mar 02, 2022 07:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 40 ஆயிரம் பாடல்களை பாடி மறைந்தாலும் தன் குரலால் உயிர் பெற்று வருகிறவர் எஸ்பிபி. இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடிய எஸ்பிபி இளையராஜாவின் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களில் பாடியுள்ளார். எஸ்பிபி உயிரோடு இருக்கும் போதே அவரின் இசையில் பாடிய எந்த பாடலையும் ராயல்டி வாங்காமல் கச்சேரிகளில் பாடக்கூடாது என்று இளையராஜா வழக்கு போட்டார்.

அவர் மட்டுமில்லாது பலரிடம் இப்படியான சண்டையை ஆணவத்தில் செய்து வந்தார் இளையராஜா. மறைந்த பாடகர் எஸ்பிபியின் பெயரில் அவரது மகன் எஸ்பி சரண் அமெரிக்காவில் கச்சேரி நடத்தி வந்துள்ளார். அதற்கும் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து எஸ்பி சரண் கூறியது, என் தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து 2 ஆயிரம் பாடல்கள் தான் பாடியுள்ளார்.

மற்ற இசையமைப்பாளர் இசையில் மீதம் 36 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார். அந்த பாடல்களே நாங்கள் இசை கச்சேரியில் பயன்படுத்தி வருகிறோம். இளையராஜாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று அப்பா உறுதியாக கூறியிருந்தார்.

அவரின் நோட்டிஸிற்கு மட்டும் எங்களின் பதில் இருக்கும். இதுகுறித்து இளையராஜா குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசவில்லை என்று கூறியுள்ளார் எஸ்பி சரண். இதுபோல் இளையராஜா பல பாடகர்களிடம் வம்புக்கு இழுத்து ராயல்டி வாங்க வைத்துள்ளார்.