நம்பிக்கையோடு கெஞ்சிய இயக்குனர்! ஆணவத்தில் உதவாமல் கைவிட்ட இளையராஜா..

parthiban ilaiyaraaja thagapachan azhaki
By Edward Apr 19, 2022 01:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் விரும்பக்கூடிய பாடல்களை கொடுத்து வருபவர் இளையராஜா. தன்னுடைய பாட்டுகளாலும் மெட்டுக்களாலும் காந்தம் போல் ஈர்த்து வந்த இளையராஜா பல விருதுகளுக்கு சொந்தக்காரார். அப்படி இருக்கும் இசைஞானி சர்ச்சையில் சிக்கியும் இருக்கிறார்.

ராயல்டி பெறாமல் பாடும் பல கலைஞர்களுடன் சண்டைப்போட்டு வழக்கும் தொடுத்து இருக்கிறார். தலைக்கணத்தில் ஆடிய இளையராஜா தான் பணியாற்றும் இயக்குனரிடமே சில பிரச்சனைகளை கொடுத்துள்ளாராம். அப்படி பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் போன்றவர்கள் நடித்த படம் அழகி.

இப்படத்தினை தங்கர்பச்சன் இயக்கி இளையராஜா இசையமைத்திருப்பார். படம் ஒருசில காரணங்களால் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கர்பச்சனுக்கு வேறு வழியில்லாம இளையராஜாவிடம் உதவி கேட்டுள்ளார். கஷ்டப்பட்டு போராடி எடுத்த திரைப்படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று கூறி கேட்டுள்ளார் இயக்குனர்.

ஆனால் இளையராஜா இதெல்லாம் சினிமாவில் ரொம்ப சகஜம் அதனால் நீ உன்னுடைய ஊருக்கே போய் விடு என்று கூறியிருக்கிறாம். தன் தயாரிப்பாளரும் தங்கர்பச்சனின் நண்பர் இப்படத்தின் கஷ்டப்பட்டு வெளியிட்டு பெரிய ஹிட் கொடுத்தார். இதை பல ஆண்டுகள் கழித்து தங்கர்பச்சன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.