விமானத்துக்காக 7 மணிநேரம் காத்திருக்க வைத்த விமான நிலையம்.. கடும்கோபத்தில் டென்ஷனான இளையராஜா...

Ilayaraaja Dubai Hungary
By Edward Aug 28, 2022 01:40 PM GMT
Report

இசையுலகின் ஜாம்பவனாகவும் இசைஞானியாகவும் திகழ்ந்து வரும் இளையராஜா தற்போது இசைக்கச்சேரிகளை பல நாடுகளில் நடத்தி வருகிறார். உலகம் எங்கும் தன் இசையை பரப்ப பல கலைஞர்களை வரவழைத்து இசை கச்சேரியை நடத்து காசு சம்பாதித்து வருகிறார்.

இசைஞானி கச்சேரி என்றாலே சர்ச்சைக்கு பேர் போனதாகதான் இருக்கும். அப்படி பல கச்சேரிகளிலும் நிகழ்ச்சிகளிலும் பலரை அவமானப்படுத்தி இருக்கிறார் இளையராஜா. இந்நிலையில், ஹங்கேரி நாட்டில் இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டு இருந்துள்ளார் இளையராஜா.

இதற்காக நேற்று அதிகாலை 2 மணிக்கு துபாயி சென்று அங்கிருந்து ஹங்கேரி நாட்டுக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டார். சென்னை விமான நிலையத்திற்கு என்ற இளையராஜா சில காரணங்களால் சுமார் 7 மணிநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்றாம்.

அதாவது சென்னையில் பலத்த மழை பெய்ததன் காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும் தரையிரங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னை வரும் இண்டர்நேஷன்ல் விமானங்கள் பல இதற்காக பெங்களூர், ஹைதராபாத் என்று திருப்பிவிடப்பட்டதாம்.

முதலில் 2 மணிநேரம் என்று கூறி சுமார் 7 மணி நேரம் வரை இதனால் காத்திருத்தாராம் இளையராஜா. பின் கடும்கோபத்தில் டென்ஷனாகி துபாய் விமானத்தில் ஏறி சென்றிருக்கிறார்.