குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கிய இளையராஜா.. பொறாமையில் இப்படியா செய்வது

bomb blast ilaiyaraja shankar ganesh
By Kathick Jan 24, 2022 04:10 PM GMT
Report

80ஸ் காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் சங்கர் கணேஷ். இவர் இசையமைத்த பல படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. அப்போது இளையராஜாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு இவருடைய இசை இருந்தது.

சங்கர் கணேஷ் அவர்களுக்கு, 1986ல் ரசிகர்களால் பரிசு பொட்டலத்தில் வெடிகுண்டு அனுப்பப்பட்டிருந்தது. அந்த பார்சலை திறக்கும்போது வெடிகுண்டு வெடித்து அவருடைய இரண்டு கைகளிலும், வலது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. அதன்பின்பு பலவருட சிகிச்சைக்கு பிறகு பார்வையைப் பெற்றார் சங்கர் கணேஷ்.

இதனால்தான் எப்பொழுதுமே கையில் ஒரு கிளவுஸ் போட்டு இருப்பார் சங்கர் கணேஷ். இளையராஜாவின் இசை அவ்வளவாக அங்கீகாரம் பெறவில்லை. இதனால் இசையில் உச்சத்தில் இருந்த சங்கர் கணேஷை, எப்படியாவது கீழே சரிக்க வேண்டும் என்று எண்ணி, சங்கர் கணேஷ் மீது போட்டி, பொறாமை காரணமாக இளையராஜா தான், சங்கர் கணேஷ் வீட்டிற்கு வெடிகுண்டு அனுப்பப்பட்டதாக 80ஸ் காலகட்டத்தில் கூறப்பட்டது.

ஆனால் சேலத்தைச் சேர்ந்த கவிஞர் கந்தசாமி என்ற நபர் இசை சம்பந்தமாக சங்கர் கணேஷ்க்கு முன்தொகை கொடுத்துள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சனையால் கந்தசாமி, சங்கர் கணேஷ் வீட்டுக்கு கொரியரில் வெடிகுண்டு அனுப்பி உள்ளார் என்று பின் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, இளையராஜாவின் பொறாமை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.