ஆணவத்தில் கூட இருந்தவர்களையே பகைத்துக் கொண்ட இளையராஜா.. ரகுமானையும் விட்டுவைக்காத இசைஞானி..
இளையராஜா செய்யும் பல விஷயங்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதும், அதற்கு பிறகு அவருக்கு எம்பி பதவி தரப்பட்டதும் சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. அத்தனை விமர்சனங்களை தாண்டி இளையராஜா எம்பி பதவியை ஏற்றுக்கொண்டார்.
பகைத்துக்கொண்ட இசைஞானி
அப்படியிருக்கும் போது ஆரம்பத்தில் இருந்தே பலருடன் பல பிரச்சனைகளையும் செய்து வந்தார். அப்படி பாடலில் வரிகளை சரி செய்து வைரமுத்துவை அசிங்கப்படுத்தி தூக்கி எறிந்தவர் இசைஞானி. ஒருகட்டத்தில் இளையராஜாவை நெருங்குவதை கூட விட்டுவிட்டார் வைரமுத்து.

இவருக்கு பின், இயக்குனர் லெஜண்ட் பாரதிராஜாவையும் பகைத்துக்கொண்டார் இசைஞானி. பாரதிராஜாவும் - இளையராஜாவும் நண்பர்களாக இருந்து பல வெற்றியை கொடுத்தனர். ஆனால் நாடோடி தென்றல் படத்திற்கு பிறகு சில பிரச்சனையால் அவர் சவகாசத்தை விட்டுவிட்டார் பாரதிராஜா.
இளையராஜா இசையில் 500க்கும் மேற்பட்ட பாடலை பாடியவர் எஸ்பிபி. இருவரும் ரெட்டை ரோஜாவாக இருக்கையில், ராயல்டி பிரச்சனையால் வழக்கு வரை சென்றிருக்கிறார் இளையராஜா. இதன்பின் அவர் இசையில் பாடவும் கச்சேரியில் கலந்து கொள்ளவும் மறுத்துவிட்டார் எஸ்பிபி.
சில காரணங்களால் மணிரத்னம் படத்தில் இசையமைக்க முடியாமல் போக ஏ ஆர் ரகுமானை ரோஜா படத்தில் இறக்கினார் மணி. அப்படத்தில் ஆரம்பித்து தற்போது வரை மணிரத்னம் - ரகுமான் கூட்டணி தான். அதனால் பல மேடைகளில் ஏ ஆர் ரகுமானை மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறார் இசைஞானி.

நடிகையுடனும் இப்படித்தான்
சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சங்கத்தினர் நடத்தி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரோகினியை மரியாதை இல்லாமல் அசிங்கப்படுத்தி இருக்கிறார் இசைஞானி.
இயக்குனர் சங்கர் இதுவரை இளையராஜாவுடன் கூட்டணி சேரவில்லையே இணைந்து எப்போது படம் பண்ணப்போகிறீர்கள் என்று ரோகினி கேட்க, நீ எனக்கு வாய்ப்பு வாங்கி தரியா என்று முகம் சுளிக்க வைத்திருக்கிறார் இளையராஜா.
இதுபோல் பல பிரபலங்களுடன் பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு மரியாதையை கெடுத்துக்கொண்டார் இசைஞானி.