கோபத்துக்கு ஒரு வரம்பு இருக்கு? ஆணவத்தில் தம்பி மனைவி மறைவுக்கு கூட போகாத இசைஞானி...
தமிழ் திரையுலகின் இசையின் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் படியான 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை கொடுத்து ரசிக்க வைத்து வருகிறார். அப்படியொரு மனிதர் குணத்தில் கர்வமும் ஆணவமும் தலைக்கணமும் உடையவர் என்று பலரால் விமர்சிக்கப்பட்டார்.
மேடையில் நட்சத்திரங்களை அசிங்கப்படுத்தி பேசுவது பேட்டியில் நிரூபர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, நெருக்கமாக இருந்த எஸ்பிபி, வைரமுத்து, பாக்யராஜா, கங்கை அமரனுடனான பகையை சம்பாத்தித்தும் இருந்துள்ளார்.
அண்ணன் தம்பிகளாக இருந்து சினிமாவில் இயக்கம், இசையில் ஜாம்பவன்களாக இருந்த போது தன் தம்பி கங்கை அமரனையும் பகைத்துக்கொண்டார் இசைஞானி. ராயல்டி விசயத்தில் தனக்கு தெரியாமல் கங்கை அமரன் பயன்படுத்தியதாக இளையராஜா 13 ஆண்டுகளுக்கு முன் சண்டை போட்டு முகத்தில் கூட முழிக்காமல் இருந்து வந்தார்.
எஸ்பிபி இறப்பில் கூட அண்ணனை விட எஸ்பிபி மேல் தான் பாசம் அதிகம் என்று கூட கங்கை அமரன் கூறியிருந்தார். தம்பி மீது கோபத்தில் இருந்த இளையராஜா கங்கை அமரன் மனைவி மணிமேகலை மரணமடைந்த போது கூட வரவில்லையாம்.
கடந்த ஆண்டு இறந்த அவரின் இறுதி சடங்குக்கு கூட வராமல் இருந்தது அப்போது பெரியளவில் பேசப்பட்டது. அப்படி இருக்கும் நிலையில் கங்கை அமரன் 13 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார்.
உடல் நலம் பற்றியும் மனைவி பற்றியும் கேட்டு 1 மணி நேரத்திற்கு மேலும் பேசினார் அண்ணன் என்று கூறியிருந்தார் கங்கை அமரன்.