ஆணவத்தில் ஆடிய இளையராஜா? ஆர்வக்கோளாறில் இயக்குனர் செய்த செயல்..

Vijay Sethupathi Ilayaraaja Yuvan Shankar Raja Maamanithan
1 வாரம் முன்
Edward

Edward

40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை கொடுத்து பல ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து இசை ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. அந்த அளவிற்கு புகழ் பெற்ற மனிதர் ஒருசில செயல்களால் தலைக்கனத்தில் ஆடியும் கெட்ட பெயர் எடுத்துள்ளார்.

ஆணவத்தில் ஆடிய இளையராஜா? ஆர்வக்கோளாறில் இயக்குனர் செய்த செயல்.. | Ilayaraja Angry On Director Because Of This Tweet

மாமனிதன் பிரச்சனை

அப்படி சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்திற்கு தன் மகன் யுவன் சங்கராஜாவுடன் இசைமைத்திருக்கிறார் இளையராஜா. ரீகம்போசிஸ் செய்யும் போது கூட இயக்குனர் சீனு ராமசாமியை அனுமதிக்காமல் அவமானப்படுத்தி வந்ததாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கதறி அழுதுள்ளார் இயக்குனர்.

இந்த படத்தில் பாடல் எழுதிய கவிஞர்கள் கூட பாடல் வரிகளை தனக்கு காண்பிக்க தயங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

ஆணவத்தில் ஆடிய இளையராஜா? ஆர்வக்கோளாறில் இயக்குனர் செய்த செயல்.. | Ilayaraja Angry On Director Because Of This Tweet

வைரமுத்தால் வந்த விணை

அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார். ஏற்கனவே இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் வாய்க்கால் சண்டை போல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளது.

இதனை வெறுப்பேறும் வண்ணம் ஆணவத்தில் இருந்த இசைஞானிக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தான் இளையராஜா சீனு ராமசாமியிடம் கடந்த 5 ஆண்டுகளாக இப்படி நடந்து கொண்டுள்ளாராம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.