மேடையில் கண்ணீர்விட்டு அழுத்த இளையராஜா.. வைரலாகும் வீடியோ

Ilayaraaja S P Balasubrahmanyam
By Kathick Jun 15, 2022 01:20 PM GMT
Report

தன் இனிமையான பல கோடி இதயங்களை கொள்ளைகொண்டவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார். இவருடைய மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இவருடைய 75வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக எஸ்.பி.பியின் மகனும், பின்னணி பாடகருமான எஸ்.பி. சரண், SPB 75 எனும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு, எஸ்.பி.பி அவர்களுடனான தனது உறவு குறித்து உருக்கமாக பேசியுள்ளார்கள்.

இதில், தனது நண்பன் இளையராஜா குறித்து முதலில் பேசிவிட்டு, பின் அவருக்காக பாட்டுபாடும் பொழுது கண்கலங்கி அழுகிறார். தனது நண்பருக்காக இளையராஜா மேடையில் அழுத வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.