மணிரத்னதுக்கு எவ்வளவோ செஞ்சிருக்கேன்!! பல ஆண்டு ரகசியத்தை சொல்லிக்காட்டும் இளையராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் மணிரத்னம் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இரு பாகங்களாக வெளியிட்டு 800 கோடிக்கும் மேல் வசூலை பெற்றார். இதற்கு முன் மணிரத்னத்தின் சினிமா வாழ்க்கையில் இளையராஜாவை ஒதுக்கிவிட்டு ஏ ஆர் ரகுமான் பக்கம் திரும்பினார்.
இதற்கு காரணம் ரோஜா படத்தில் ஏற்பட்ட மன கசப்பு காரணமாகத்தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மணிரத்னத்திற்கு மறைமுகமாக தான் உதவிகளை செய்துள்ளேன் என்று கூறியிருக்கிறார் இசைஞானி.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் மணிரத்னத்திற்கு பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அப்போது அவரின் படத்திற்காக குறைவாக பணம் வாங்கிகொண்டு இசையமைத்து கொடுத்திருக்கிறேன்.
மேலும், மற்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பேசி மணிரத்னத்திற்கு வாய்ப்பு வாங்கு கொடுத்துள்ளேன் என்றும் இது அவருக்கு தெரியாமல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார் இசைஞானி இளையராஜா.