4 இசையமைப்பாளர்கள் வளரவிடாமல் தடுத்த இசைஞானி!! முற்றுப்புள்ளி வைத்த இசைப்புயல்..
தமிழ் சினிமாவில் இசை கடவுளாக தன்னை பெருமைப்படுத்திக்கொண்டு பல ஆயிரம் பாடலுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார் இசைஞானி இளையராஜா. இசைத்திறமை எந்தளவிற்கு இருக்கிறதோ அதேபோல் பல படங்கு கர்வமும் நிறைந்தவராகவும் திகழ்கிறார். பல மேடைகளில் பிரபலங்கள் உட்பட பலரை மிகவும் மட்டமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் மற்ற இசையமைப்பாளர்களை வளரவிடாமல் தடுத்தும் இருக்கிறார் இசைஞானி.
சந்திரபோஸ்
தேனிசை தென்றல் தேவாவுடன் கலை நிகழ்ச்சிகளில் பலமுறை பாடியவரில் ஒருவர் சந்திரபோஸ். 100க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்திருக்கும் சந்திரபோஸ், பல ஹிட் பாடல்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால் தற்போது இசையமைத்த அவர் வளராமல் போனார். தற்போது சின்னத்திரையில் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
எஸ் ஏ ராஜ்குமார்
தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் எஸ் ஏ ராஜ்குமார். 90ஸ் காலத்தில் பல ஹிட் பூவே உனக்காக, சூரிய வம்சம், அவள் வருவாளா, நீ வருவாய் என, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் எஸ் ஏ ராஜ்குமார்.
மரகதமணி கீரவாணி
தற்போது தெலுங்கு சினிமாவில் டாப் இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் கீரவாணி, இளையராஜாவால் தடுக்கப்பட்ட இசையமைப்பாளரில் ஒருவர். மரகதமணி என்ற பெயரில் ஆரம்பித்த இவர் சமீபத்தில் ஆஸ்கர் விருதினை நாட்டு நாட்டு பாடலுக்காக பெற்றார். தமிழில் ஒருசில படங்களில் இசையமைத்தப்பின் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.
கங்கை அமரன்
இளையராஜாவின் சொந்த தம்பியாக இருந்தாலும் பன்முக திறமை கொண்ட கங்கை அமரனிடம் சண்டை போட்டு அவரது மார்க்கெட்டையே உடைத்தார் இசைஞானி. பல ஹிட் படங்களை கொடுத்த கங்கை அமரன் பல ஆண்டுகளுக்கு பின் இளையராஜாவுடன் இணைந்துள்ளார்.
இப்படி பல ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர்களை எல்லாம் இடம் தெரியாமல் ஒதுக்கிய இளையராஜாவுக்கு போட்டியாக வந்தவர் தான் இசைப்புயர் ஏ ஆர் ரகுமான். ஆரம்பித்த முதல் படமே மிகப்பெரிய ஹிட்டை கொடுத்து தன்னுடைய சாம்ராஜ்யத்தை அமைத்தார் ஏ ஆர் ரகுமான்.