2ஆவது குழந்தைக்குப் பின் என் வாழ்க்கை மாறியது.. வருத்தத்தில் நடிகை இலியானா!
இலியானா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத இலியானா தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.
2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இலியானா தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அமெரிக்க நடிகர் மைக்கேல் டோலனை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட இலியானாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
வருத்தத்தில் இலியானா!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் இலியானா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், "முதல் முறை குழந்தை பிறந்தபோது மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டேன். தனியாக இருந்தபோதிலும் குழந்தையை ஆரோக்கியமாக வளர்த்தேன்.
ஆனால் இரண்டாவது முறை நிலைமை முற்றிலும் மாறியது. மன ரீதியாக குழப்பமாக உணர்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.