சிவகார்த்திகேயன் இருந்த இடத்தில் இமான்.. நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதம்!! பதற்றம் அடைந்த ரசிகர்கள்..
D Imman
Actors
D. Imman
Tamil Actors
By Dhiviyarajan
பிரபல இசையமைப்பளார் டி இமான், திருச்சியில் உள்ள ஜேஜே பொறியியல் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்காக 8500-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆனது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை அன்று காற்றுடன் பலத்த மழை ஏற்பட்டது. இதனால் அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. அங்கு அமைக்கப்பட்டிருந்த விளக்கு கம்பங்கள், தகர சீட்டுகள் , சாய்ந்து விழும் நிலைக்கு சென்றது. அங்கு இருந்த தப்பிக்க ரசிகர்கள் அங்கும் இங்குமாக ஓடினர்.
இதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த ஜேஜே பொறியியல் கல்லூரியில் தான் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.