இவ்வளவு கோடி சம்பளமா? ஒரே தமிழ் படத்தால் கதறி அழும் அக்கடதேசத்து நடிகை..
தெலுங்கு சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடிப்பது என்பது சுலபம் கிடையாது. படத்திற்கு படம் இளம்நடிகைகளின் அறிமுகம் அதிகரித்ததால் அந்த இடத்தினை பெற சில காலங்கள் எடுக்கும்.
ஆனால் அதை உடைத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று பிஸி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் என ஆரம்பித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இவர் தான் செட்டாகுவார் என்று புக் செய்து வருகிறார்கள் இயக்குநர்கள்.
தெலுங்கினை அடுத்து தமிழிலும் அறிமுகமான நடிகை ரஷ்மிகா நடிகர் கார்த்திக்கின் சுல்தான் படத்தில் நடித்திருந்தார் படம் ஓரளவுற்கு தான் ஓடியதால் நடிகை ரஷ்மிகாவின் பெயர் பெரியளவில் பேசப்படவில்லை. இனி தமிழ் படங்களே வேண்டாம் என்று ஒதுங்கி புலம்பியும் வருகிறார்.
அதற்கு காரணம், அக்கடதேசத்தில் நடிகையின் வளர்ச்சியால் 2 மற்றும் 3 கோடி சம்பளம் வாங்குவதாக செய்தியை பரப்பியுள்ளனர். மேலும், சம்பாதித்து பல சொத்தையும் ஆவணங்களையும் வைத்திருப்பதாகவும் செய்து வெளியாக உடனே வருமானத்துறையினர் அவர் வீடு பக்கம் சென்றுள்ளனர்.
இறுதியாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இதைப்பற்றி ராஷ்மிகா மந்தனாவிடம் கேட்டதற்கு நான் 2 கோடி எல்லாம் கண்ணில் கூட பார்த்ததில்லை என கண்ணீர் விட்டு கதறியுள்ளாராம் ரஷ்மிகா மந்தனா.