ரோஹித் சர்மாவுக்கு குழந்தைகளுக்கு டயாப்பர் மாற்றும் வேலை இருக்கு.. கலாய்த்து தள்ளிய ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்..
ரோஹித் சர்மா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்கு இடையே சமீபத்தில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்று இந்திய அணி 1 -3 என தோல்வியை சந்தித்து பல விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதிலும் ரோஹித் மற்றும் விராட் விளையாட்டை படுமோசமாக மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அத்துடன் பல போட்டிகள் ஆடிய ரோஹித் சர்மா மோசமான ஃபார்மை கொடுத்து வருவதால் ஓய்வை அறிவிக்கலாமே என்றும் கூறி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு ரோஹித், பேனா, பேப்பர் எடுத்து எழுதுபவர்கள் என்னை ஓய்வு எடுக்க சொல்ல முடியாது என்று பதிலடி கொடுத்தார்.
ஆடம் கில்கிறிஸ்ட்
இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பேசுகையில், ரோஹித் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று நினைக்கவில்லை.
இந்தியா சென்றவுடன் தனது நிலையை சிந்திப்பார் என்று நினைத்தேன், முதலில் அவர் வீட்டுக்கு சென்றவுடன் தன் இரு குழந்தைக்கு டயாப்பர் மாற்றுவார், அப்போது இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும் என அவருக்கு தோன்றலாம்.
ஆனால் அது நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை, அவர் சாம்பியன்ஸ் ட்ராஃபியில் சரியாக விளையாடமாட்டார் என நினைக்கிறேன். அதன்பின் அவரை நாம் பார்க்க மாட்டோம் என்று விமர்சித்துள்ளார்.