புதிய காதலி இருக்கட்டும்!! ஹர்திக் பாண்டியா போட்டிருந்த வாட்ச் எத்தனை கோடி தெரியுமா?
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட்டராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, சாப்பியன் டிராஃபி 2025 போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுக்களை எடுத்தார்.
இதனைதொடர்ந்து ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலியாக கிசுகிசுக்கப்படும் பாடகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, ஹர்திக் பாண்டியாவின் வாட்ச் பலரது கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது. பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்தி அவருக்கு பாய் பாய் காட்டியபோது ஹர்திக் பாண்டியாவின் கையொல் கட்டி இருந்த வாட்ச் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிச்சர்ட் மிலே
ஆப்பிள் வாட்ச் தான் என்று சிலர் ஆரம்பத்தில் நினைத்திருந்த நிலையில், அந்த வாட்ச் பெயர் என்ன, விலை என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா கட்டியிருந்த அந்த வாட்ச், விலையுயர்ந்த ரிச்சர்ட் மிலே ஆரம் 27-02 வாட்ச் மாடலை சேர்ந்ததாம். உலகத்திலேயே வெறும் 50 வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் டென்னிஸ் ஜான்பவான் ரஃபேல் நடாலுக்காக இந்த வாட்ச் உருவாக்கப்பட்டது.
ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் வாட்ச்களை சேமித்து வைப்பவர் என்பதால் இந்த 6.92 கோடி ரூபாய் மதிப்புள்ள வாட்ச்சை வாங்கியிருக்கிறார்.
2015 ல் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வெறும் மேகி, நூடுல்ஸ் மட்டுமே சாப்பிட்டு வந்த ஹர்திக் பாண்டியா, தன்னுடைய உழைப்பால் இந்தியாவே மிரண்டு போகும் அளவிற்கு தன்னுடைய தரத்தையும் திறமையும் காட்டி வருகிறார்.