இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்!! முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இவ்வளவா...
உலகளவில் டாப் பணக்காரர்கள் லிஸ்ட் ஆண்டுதோறும் வெளியாகும். அப்படி உலகளவில் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து வருகிறார்.
அந்தவகையில் ஆசியாவின் டாப் பணக்காரராகவும், இந்தியாவின் டாப் 1 பணக்காரராகவும் திகழ்ந்து வருகிறார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயின் தலைவர் முகேஷ் அம்பானி.
இந்த ஆண்டும் இந்தியாவின் டாப் பணக்காரராகவும் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். அப்படி இந்தியாவின் பணக்காரர்கள் லிஸ்ட்டில் டாப் 10 இடத்தினை யார் யார் பிடித்துள்ளார்கள் என்ற பட்டியலை எம் 3 எம் ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ளது.
டாப் 10 பணக்காரர்கள்
சுமார் ரூ. 9.55 லட்சம் கோடி சொத்து மதிப்பை வைத்துள்ள முகேஷ் அம்பானி டாப் 1 பணக்காரராக திகழ்ந்து வருகிறார். அவரை தொடர்ந்து கெளதம் அதானி ரூ. 8.15 லட்சம் கோடியுடன் 2வது இடத்திலும், ரோஷினி நாடார் ரூ. 2.84 லட்சம் கோடியுடன் 3வது இடத்திலும், சைரஸ் பூனாவாலா ரூ. 2.46 லட்சம் கோடியுடன் 4வது இடத்திலும் இருக்கிறார்கள்.
அவர்களை தொடர்ந்து 5 வது இடத்தில் ரூ. 2.32 லட்சம் கோடி சொத்துடன் குமார் மங்கலம் பிர்லா பிடித்துள்ளார்.
நீரஜ் பஜாஜ் தலைவர் ரூ. 2.32 லட்சம் கோடியுடன் 6வது இடத்திலும், திலீப் சங்வி ரூ. 2.30 லட்சம் கோடியுடன் 7வது இடத்திலும், அசீம் பிரேம்ஜி ரூ. 2.21 லட்சம் கோடியுடன் 8வது இடத்திலும் இருக்கிறார்.
கோபிசந்த் ஹிந்துஜா ரூ. 1.85 கோடிகளுடன் 9வது இடத்திலும், ராதாகிஷன் டமானி ரூ. 1.82 லட்சம் கோடியுடன் 10வது இடத்திலும் இருக்கிறார்.
மேலும், இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரூ. 12 ஆயிரம் கோடியுடன் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.