ஐய்யோ அந்த உலக நடிகனா! வேண்டவே வேண்டாம்பா?. ஓடும் நடிகையால் புலம்பும் பிரம்மாண்டம்
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் அதுவும் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை முடித்தவர் 67 வயது நடிகர். அவரின் நடிப்பில் பல வசூல் சாதனைகள் பெற்றாலும் நடிப்பில் அனைவரையும் கவர்ந்தவர். அவர் நடிப்பில் பல படங்கள் பாகம் 2 எடுத்து வரும் நிலையில், இந்தியன் படமும் பிரம்மாண்ட இயக்குநர் இயக்கத்தில் ஆரம்பித்தது.
அதில் சமீபத்தில் திருமணம் செய்த அகர்வால் நடிகையும் ஒருவர். தற்போது படப்பிடிப்புகள் விபத்தில் முடிந்ததால் அப்படியே நிறுத்தியும் வைக்கப்பட்டது. இதனால் நடிகை அந்த பக்கம் வராமல் கணவருடன் ரொமான்ஸ் செய்தும் வருகிறார்.
அதேபோல் இயக்குநரும் அக்கடதேசத்து நடிகருடன் படப்பிடிப்பில் பிஸியாகவும் உலக நடிகன் விக்ரம் பேர் கொண்ட படத்தில் பிஸியாகவும் டிவி நிகழ்ச்சியில் தொகுத்தும் வருகிறார். இதனால் அந்த நடிகை அந்த படமா அந்த நாயகனா வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி வருகிறாராம்.
இதனால் மீண்டும் அகர்வால் பகுதிகளை வேறு ஒரு நடிகையை வைத்து மொத்தமாக ஷூட் செய்ய வேண்டிய நிலைமை. அதுபோக ஏற்கனவே இந்தியன் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், என்ன செய்யப் போகிறாரோ.