நயன்தாராவிற்கு இந்த இந்தியன் நடிகரா? வேண்டாம் என ஓடியபின் இவரை மாற்றிய இயக்குநர்!

Nayanthara kamal sarathkumar ayya
By Jon Apr 04, 2021 02:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா தொகுப்பாளினியாக ஆரம்பித்த அவரின் சினிமா வாழ்க்கை தற்போது குறுகிய காலத்தில் பல கஷ்டங்களுக்கு பிறகு இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் தமிழில் வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார் நயன்.

இப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து பின் பல படங்களில் கமிட்டாக காரணமாக இருந்தது. ஆனால், முதன் முதலில் ஐயா படத்தில் நடிக்க இருந்தவர் முன்னணி நடிகர் கமலஹாசன் தானாம். தயாரிப்பாளர் ஞானவேல் ஹரியை அழைத்துச் சென்று இந்த கதையை முதன் முதலில் கமல் ஹாசனிடம் கூறினாராம். கமல்ஹாசனும் இந்த படத்தை தேவர் மகன் போல் பிரமாண்டமாக எடுக்கலாம் என முதலில் கதை விவாதத்தில் ஈடுபட்டாராம். பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை.

அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம் கமல். அதன்பிறகுதான் ஹரி சரத்குமாரை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார். ஹரியின் கதை எப்போதுமே ஒரு நடிகரை சார்ந்திருக்காது என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம். ஒரு காலத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கமர்சியல் படங்களை எடுத்து வந்தார் ஹரி.

ஆனால் சமீபகாலமாக ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய பிளஸ் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் சிங்கம் 3, சாமி 2 போன்ற தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். எப்போதும் ஹரி படங்கள் வசனங்களுக்கு பெயர் போனது. இந்த இரண்டு படங்களின் வசனங்களை காதில் கேட்க முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.